இளம் பெண்ணை கொலை செய்ய முயன்ற எஸ்எஸ்ஐ கைது

இளம் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற தனிப்பிரிவு போலிஸ் எஸ்எஸ்ஐ கைது;

Update: 2025-09-23 06:39 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த கோமதி குடும்ப தகராறு காரணமாக புகார் அளிக்க வந்த போது எஸ்எஸ்ஐ ராஜாராமுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது பின் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்தநிலையில் கோமதி-ராஜாராம் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் இரவு பரிகாரம் செய்வதாக கூறி பெருமாள் கோவில் மேடு பகுதியில் ராஜாராம் கோமதியை கிணற்றில் தள்ளியுள்ளார் உயிருக்கு போராடிய கோமதி நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இன்று செவ்வாய்க்கிழமை அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ ராஜாராம் கைது செய்யப்பட்டுள்ளார்

Similar News