வர்த்தக சங்கத்துக்கு நலவாரியம் அமைத்து காப்பிடு

திட்டச்சேரி வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்;

Update: 2025-09-23 07:36 GMT
நாகை மாவட்டம் திட்டச்சேரியில், வணிகர் சங்க கூட்டம் சின்ன பள்ளிவாசலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிகர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இதில், சங்கத்தின் தலைவராக எம்.முகமது சாதிக், துணைத் தலைவராக ஆர்.பிரகாஷ், செயலாளராக டி.ஏ.அப்துல் பாசித், துணை செயலாளராக டி.பத்மநாபன், பொருளாளராக ஏ.அப்துல்ரகுமான் மற்றும் 18- செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில், மாத மாதம் கூட்டத்தை நடத்துவது, மாத சந்தா வசூல் செய்வது, வர்த்தக சங்கத்துக்கு நல வாரியம் அமைத்து காப்பீடு செய்ய வேண்டும். வர்த்தகர்கள் 100 சதவீதம் புகையிலை மற்றும் போதைப் பொருள்களை விற்பனை செய்யவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News