அஞ்சல் கோட்ட குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு
தர்மபுரி அஞ்சல் கோட்ட குறைத்தீர் கூட்டம், கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு;
தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தர்மபுரி கோட்ட அளவில் அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30-ந்தேதி தர்மபுரி கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடக்கிறது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்கள் புகார்களை வருகிற 26-ந்தேதிக்குள் வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும். அனுப்பும் உரையின் மீது டேக் அதாலத் கேஸ் என்று குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்