டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற இந்திய தேசியக் கொடி தொடர்பான இணைய வழி வினாடி - வினா.

இந்திய நடுவண் அரசின் இளைஞர் நலன்;

Update: 2025-09-24 12:10 GMT
"இந்திய தேசியக் கொடி தொடர்பான இணைய வழி வினாடி - வினா" நிகழ்ச்சியினை 1.8.2025 முதல் 15.8.2025 வரை நடத்தியது. இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 286 மாணவியர் (கம்ப்யூட்டர் சயின்ஸ் - 122, வணிகவியல் - 57, ஆங்கிலம் - 55, கணிதவியல் - 30, இயற்பியல் - 16 மற்றும் நியூட்ரிசன் & டயட்டிக்ஸ் 6) மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் & நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார் கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் விக்சித் பாரத் - 2047 அமைப்பு செய்திருந்தது. நிகழ்ச்சியில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம். ராஜபத்மாவதி, இதன் உறுப்பினர்கள் எஸ். ஜெயந்தி, பி. கவிதா, கே. விஜயகுமாரி, எம். ரினீஷா, பி. மதுப்ரியா, எம். வீ. மேகவர்ஷினி, எஸ். பிரதிஷ்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News