நவோதயா பள்ளி மாணவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி.
மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கு விளையாட தகுதிபெற்று சாதனை.;
தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகளை பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தி வருகின்றனர். அதில் நமது நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் செல்வன் ஆர். அகில் (பதினொன்றாம் வகுப்பு ) கலந்துகொண்டு நீச்சல் போட்டியில் 100மீட்டர் BREAST STROKE மற்றும் 100மீட்டர் FREE STYLE ஆகிய இரண்டு பிரிவிலும் விளையாடி தங்கப்பதக்கும் பெற்று மாநில அளவிலான சென்னையில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் இன்று பள்ளியில் சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்பேசுகையில் “மாணவர் அகில் மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று பெற்றோருக்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும், படிக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார் பள்ளி முதல்வர், இருபால் ஆசியரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் மாணவரை முதல்வர் கேர்ப்பையில் விளையாடி வெற்றி பெற பாராட்டி, வாழ்த்தினார்கள்.