அஞ்சலகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த ஆட்சியர்
தருமபுரி அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் கலெக்டர் ரெ.சதீஸ், நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.;
தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், தர்மபுரி எம்பி ஆ.மணி ஆகியோர் முன்னிலையில் இன்று புதன்கிழமை நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், இ.வ.ப., தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், துணை அஞ்சல் கண்காணிப்பாளர் ராகுல் ராவத், தருமபுரி CPC மேற்பார்வையாளர்கீதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.