மலையூர் கோபால்சாமி கோவில் திருக்கல்யாண உற்சவம்
பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மலையூர் கோபால்சாமி கோவில் திருக்கல்யாண உற்சவம்;
பாப்பாரப்பட்டி அடுத்த மலையூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோபால்சாமி திருக்கோவில் உள்ளது நேற்று புதன்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத கோபால்சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது இதனையொட்டி மூலவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பென்னாகரம் டி எஸ் பி பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.