அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியல் அறிவிப்பு

அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஒப்புதலால் வாபஸ்;

Update: 2025-09-25 11:50 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சாட்டியக்குடி ஊராட்சிக்குட்பட்ட மேலவிடங்களூர், பில்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, சிபிஎம் கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. அதிகாரிகள் அழைப்பின்பேரில், கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமைதி கூட்ட பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், மேலவிடங்களூர் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தி, தடுப்பு சுமார் அமைத்து தர வேண்டும். வளத்தாமங்கலம் முதல் சமத்துவபுரம் வரை செல்லும் சாலையில் மேலவிடங்களூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சாட்டியக்குடியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, மற்றும் சாலை வசதி. குடிநீர் வசதி உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர். மேற்கண்ட கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டது. இதன் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, ஊராட்சி செயலர் கணேஷ், சிபிஎம் கிளை செயலாளர்கள் ஆர்.குமார், ஜி.ராமமூர்த்தி, எஸ்.பாபு, ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.என்‌.அம்பிகாபதி,'எம்.ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News