உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.
நாமக்கல், சேந்தமங்கலம் வட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பயனாளிகள் 1,027 நபர்களுக்கு ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்;
இராசிபுரம் வட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பயனாளிகள் 742 நபர்களுக்கு ரூ.70.42 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச்சு. நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், இராசிபுரம் நகராட்சி, இராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி மற்றும் பட்டணம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 742 பயனாளிகளுக்கு ரூ.70.42 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் - 238 முகாம்கள் நகர்ப்புறம் 110, கிராமப்புறம் -118) நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையும் (நகர்ப்புறம் -44, கிராமப்புறம் -58), 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரையும் (நகர்ப்புறம் -36, கிராமப்புறம் -40) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-ம் கட்டமாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரை 60 முகாம்கள் (நகர்ப்புறம் -30, கிராமப்புறம் -30) நடத்திட திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் நாளது வரை 226 முகாம்கள் நடத்தப்பட்டு, 97,593 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 66,876 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதன்படி, நாமக்கல் வட்டத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 415 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டிலும், சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் காளப்பநாயக்கன்பட்டி முகாம் பயனாளிகள் 612 நபர்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 15.07.2025 முதல் 19.09.2025 வரை இராசிபுரம் நகராட்சியில் 8 முகாம், இராசிபுரம் வட்டத்தில் 7 முகாம், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 2 முகாம், பட்டணம் பேரூராட்சியில் 2 முகாம் என 19 முகாம்கள் நடத்தப்பட்டு 9020 மனுக்கள் பெறப்பட்டதில், இன்றைய தினம் 742 பயனாளிகளுக்கு ரூ.70.42 இலடசம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றி வரும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1,14,400/- மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேர், வேளாண்மைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.25,988/- மதிப்பீட்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் தட்டு வெட்டும் கருவி, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,690/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு ரூ.13,000/- மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 40 பயனாளிக்கு சொத்து வரி பெயர் மாற்றம், காலிமனை வரி, புதிய சொத்துவரி, சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 31 பயனாளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை, புதிய குடிநீர் இணைப்பு, வீட்டு வரி இரசீது, 1 பயனாளிக்கு ரூ.5,000/- மதிப்பீட்டில் ஈம சடங்கு நிதியுதவி, பிள்ளாநல்லூர் பேரூராட்சி சார்பில் 9 பயனாளிக்கு புதிய சொத்துவரி, சொத்து வரி பெயர் மாற்றம், பட்டணம் பேரூராட்சி சார்பில் 31 பயனாளிக்கு புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, வருவாய்த்துறையின் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.47,00,000/- மதிப்பீட்டில் இ- பட்டா, 100 பயனாளிகளுக்கு பட்டா உட்பிரிவு மாறுதல், 150 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மின்சாரத்துறையின் சார்பில் 59 பயனாளிக்கு புதிய மின்இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தொழிலாளர் நலத்துறையின் சார்பில்77 பயனாளிக்கு புதிய பதிவு, 23 பயனாளிக்கு ரூ.1,49,000/- மதிப்பீட்டில் கல்வி, மருத்துவக்கல்வி உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 19 பயனாளிக்கு ரூ.20,28,600/- மதிப்பீட்டில் வட்டியில்லா பயிர், நகை, கால்நடை பராமரிப்பு கடன், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 100 பயனாளிக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை, சுகாதாரத்துறையின் சார்பில் 50 பயனாளிக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட அட்டை என மொத்தம் 742 பயனாளிகளுக்கு ரூ.70,42,678/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர். கவிதா சங்கர், இராசிபுரம் அட்மா குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் ம.கிருஷ்ணவேணி, உதவி ஆணையர் (தொழிலாளர் நல வாரியம்) இந்தியா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, தொழிலாளர் உதவி ஆணையார் (ச.பா.தி) இந்தியா உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.