எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்த பெண்கள் பாதுகாப்பு போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான்.

நாமக்கல்லில் பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் காந்தியின் முக கவசம் அணிந்து கொண்டு போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினர்.;

Update: 2025-10-02 14:35 GMT
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP அவர்களும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் P.ராமலிங்கம் MLA கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தனர்.நாமக்கல்லில் பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் காந்தியின் முக கவசம் அணிந்து கொண்டு போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினர்.நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அக்டோபர் 2 ம் தேதி மகாத்மா காந்தியின் 156 வது ஆண்டு பிறந்த நாளையொட்டி பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் நாமக்கல், திண்டுக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் , எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அக்டோபர் 2 ம் தேதி காந்தி பிறந்த நாளையொட்டி மராத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் காந்தியின் முககவசம் அணிந்து கொண்டு ஓடினர். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய மாரத்தான் போட்டியானது மோகனூர் சாலையில் உள்ள கொண்டிச்செண்டிப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது, இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் L.சுரேஷ், மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் உமாசங்கர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், வாக்கர்ஸ் க்ளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News