சேர்க்காடு அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு அரசு மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று (அக்டோபர் 3) முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.