சின்னத்தும்பூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை

ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் குடிநீர்;

Update: 2025-10-06 04:39 GMT
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் சின்னத்தும்பூர் ஊராட்சியில், குடிநீர் பிரச்சினை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால், நாள்தோறும் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களையும், வேலைக்கு செல்பவர்களையும் நேரத்திற்கு அனுப்ப முடியாமல் தாய்மார்கள் வேதனைக்கு ஆளாகி வந்தனர். தகவலறிந்த, திமுக ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் உடனடியாக, ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில், குடிநீர் வாகனம் மூலம் இலவச குடிநீர் வழங்கினார். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். நிகழ்ச்சில், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய.சார்லஸ், ஒன்றிய பிரதிநிதி காத்தையன், கவுன்சிலர் வெற்றிவேல், இளைஞரணி பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் அணி ஸ்டாலின், கார்கின், சின்னத்தும்பூர் ஊராட்சி நடராஜன், ராவணன், முருகானந்தம், அருட்செல்வன், திருநாவுக்கரசு, அருள் ஜெகதீஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அழகு நிர்மல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News