தீபாவளி போனஸ் முன்கூட்டியே வழங்ககோரி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல் அடுத்த கிருஷ்ணாநகரில் உள்ள டாஸ்மாக் குடோன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.;

Update: 2025-10-07 13:00 GMT
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஆண்டு போனசை தீபாவளி பண்டிகை 10 நாட்களுக்கு முன்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அட்டைப்பெட்டிக்கு ரூ.3.50 என ஒரே மாதிரி ஏற்றுக்கூலி என்பதை டெண்டர் படிவத்திலேயே உத்தரவாதப்படுத்திடவேண்டும், ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News