பாரத பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அர்ஜுன் சம்பத் தகவல்.

பாலஸ்தீன ஆதரவு என்ற போர்வையில் இந்தி கூட்டணியினர் பயங்கரவாத இயக்கங்களை ஆதரித்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டியின்போது கூறினார்.;

Update: 2025-10-07 13:09 GMT
நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், வழிபாடு செய்தார். அப்போது, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர், பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்களை விடுவிக்கக் கோரியும், இஸ்ரேல்- பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரியும் வழிபாடு செய்தார். அதன்பின்னர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், 2 வருடங்களுக்கு முன்பாக இதே நாளில் இஸ்ரேலில் அமைதியாக வாழ்ந்து வந்த யூத இன மக்களை, சர்வதேச பயங்கரவாத / இஸ்லாமிய ஜிகாத் இயக்கமான ஹமாஸ் பயங்கரவாத இயக்கம், யாரும் எதிர்பாராத விதமாக, தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களை கொன்றார்கள். பெண்கள், குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். மேலும், பலரையும் சிறைப்பிடித்துச் சென்று பணய கைதிகளாக வைத்துள்ளனர். தொடர்ந்து யூத இன மக்களை இனப் படுகொலை செய்து வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் அமைப்புமீது தாக்குதல் நடத்தி வருகிறார். இன்று வரை அங்கு போர் நீடித்து வருவதால் பெண்கள் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர் நிறுத்தம் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் கருத்து. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நிர்வாகிகளிடம் பேசி ரம்ஜான் நோன்பு காலகட்டத்தில் தாக்குதலை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்துள்ளது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து யூத மக்களை மீட்க இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அல்கொய்தா இயக்கம் , செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தியது போல ஹமாஸ் இயக்கம் இன்று இஸ்ரேலியர்கள்மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தப் போரை நிறுத்தி சமாதானம் வரவேண்டும் என்பதுதான் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், இரு தரப்பிடமும் போர் நிறுத்தம் ஏற்பட பேசி வருகிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அமைதி வரவேண்டும். இஸ்ரேலிய பணியக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எல்லோரின் நோக்கம். ஆனால் பாலஸ்தீன ஆதரவு என்ற போர்வையில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு, இந்தியா முழுவதும் இண்டி கூட்டணி கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. கம்யூனிஸ்ட், திமுக கட்சியினர் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகின்றனர். பிணைய கைதிகளை மீட்க வேண்டும் என்று எந்த கோரிக்கையும் வைக்காமல், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர். பெண்களை கற்பழித்து, குழந்தைகளை கொன்று அராஜகம் செய்துவரும் ஹமாஸ் இயக்கத்தை கண்டித்து இந்தி கூட்டணியினர் பேசவில்லை. நடிகர்கள் சத்யராஜ், அமீர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத், SDPI போன்ற அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, பாலஸ்தீன ஆதரவு என்ற பெயரில், அந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி தான் போருக்கு காரணம் என்றும், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களை வைத்து பேச வைக்கின்றனர். பாஜகவுக்கும், மோடிக்கும், இந்துக்களுக்கும் எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அக்டோபர் 7- ம் தேதியை சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினமாக உலக அமைதி தினமாக மாற வேண்டும். பினைய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். போர் முடிவுக்கு வரவேண்டும். உலகப் போர் வராமல் தடுக்க ஆஞ்சநேயரால் முடியும். இராம தூதனாக சென்ற ஆஞ்சநேயர் இராவணனை வதம் செய்து சீதையை மீட்டு வந்து ராம இராஜ்ஜியத்திற்கு வழி வகுத்தார். அதேபோல இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் வழிபாடு செய்துள்ளோம். ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணியினர் தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிதான், போர் நிறுத்தம் கோரிக்கை விடுத்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து, போர் நடந்த சமயத்தில் இந்திய மாணவர்களை இராணுவ விமானத்தை அனுப்பி பத்திரமாக மீட்டு வந்தார். ஆனால் இவர்கள் போருக்கு காரணம் நரேந்திர மோடி என்று உண்மைக்கு மாறாக பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும். பிணைய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையை நாமக்கல் ஆஞ்சநேயரிடம் வேண்டி உள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய அர்ஜுன் சம்பத்,கரூர் நகரில் தவெக தலைவர் ஜோசப் விஜய் கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். ஆனால் இதற்கு முன்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மை இல்லை. நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மிகுந்த நெரிசலில் பக்தர்கள் கிரிவலம் வருவதை சீராக்கி, அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். கடந்த ஆண்டு காவல்துறை இந்து சமய அறநிலையத் துறை உரிய ஏற்பாடுகளை செய்யாத காரணத்தினால் மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா திருவிழாவில் வழிப்பறி, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது, தடியடி, ரவுடிகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. முத்தாரம்மன் தசரா திருவிழாவிலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. ஆந்திராவில் இருந்து கோவிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர், 2 காவலர்களால் மானபங்கப்படுத்தப்பட்டு அதைத் தொடர்ந்து 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 உயிர்களுக்கும் நீதி வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி மாபெரும் கோரிக்கை பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். இனிமேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழக்கூடாது. மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இனிமேல் அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டி கெத்து காட்டுவது, சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு செயற்கையாக கூட்டம் கூட்டுவது, மக்களை காக்க வைப்பது, இத்தகைய கூட்டங்களை தடுக்க வேண்டும். நீதிமன்றம், நெடுஞ்சாலை பகுதிகளில், கூட்டங்கள் நடத்தக்கூடாது, மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என கூறியுள்ளது. தவெக நடத்திய அனைத்து கூட்டங்களிலுமே பொதுச்சொத்துக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் பொது சொத்துக்கள், தடுப்புகள் உடைக்கப்பட்டன. நாமக்கலில் 16 பேர் மயக்கமடைந்தனர். அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தவெக கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் கமிஷன் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். அத்தோடு அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்யை கைது செய்ய வேண்டும். 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த, மக்களை பாதுகாக்க தவறிய திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆள்வதற்கு தகுதியற்றவர். விஜய்மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவே இந்த ஆட்சி நீடிக்க கூடாது. இந்த சம்பவத்தில் CBI விசாரணை நடத்த வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற மரணங்கள் நிகழாதபடி அரசியல் கட்சி, சினிமா, தேர்தல் பிரச்சாரம் ஆகிய கூட்டங்களை ஒரு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். வெளிநாடுகளைப் போல அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யலாம். மக்கள் கூட்டத்தை காண்பித்து செல்வாக்கை காட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் சென்றார். தொடர்ந்து கூறிய அர்ஜுன் சம்பத்,ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீதம் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கான கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்கான நிதியை மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு சமீபத்தில் வழங்கிவிட்ட போதிலும், திமுக அரசு நிதி வரவில்லை என பொய் கூறுகிறார்கள். இந்தத் திட்டத்தில், ஏழை குழந்தைகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு, ஏற்கனவே மழலையர் பள்ளியில் படித்து வந்த, பதிவு செய்திருந்த மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்கின்ற உத்தரவாக உள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கி வருவதை போல, இந்து குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும். திமுக அரசு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் மத பாகுபாடு பார்க்க கூடாது. இந்து மாணவர்களை/ தமிழக மாணவர்களை ஏன் புறக்கணிக்கிறது? இன்று உயர்கல்வித்துறை சீரழிந்து ஊழல் மயமாகிவிட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு பிறகு துணைவேந்தர் பதவி தகுதியானவர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திமுக அரசு துணை வேந்தர்களை நியமிக்கவில்லை. தமிழகத்தில் பள்ளி கட்டடங்கள் உறுதியாக இல்லை. போதைப் பொருள், பாலியல் சீண்டல் உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக மட்டுமே உள்ளார். கரூரில் சென்று கண்ணீர் வடிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ள சாராய மரணங்கள் நடந்த கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? , விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 6 பேர் உயிரிழந்த போது ஏன் கண்ணீர் வடிக்கவில்லை?, திருவண்ணாமலை நிலச்சரிவு காரணமாக உயிர் இழப்பு நடந்தபோது, அன்பில் மகேஷ் பிறந்தநாள் விழா நடத்திக் கொண்டிருந்தார். தமிழகத்தில் சுகாதாரத்துறை மோசமாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக திருட்டு சம்பவங்கள் நடந்த போதிலும் எவ்விதமான விசாரணைகளும் இல்லை. இந்த சம்பவத்தை நீர்த்துப் போக செய்கின்றனர். உடல் உறுப்புகளை திருடி பிழைப்பு நடத்தும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை திருடி சென்று விற்கின்றனர். சுகாதாரத்துறை மோசமடைந்துவிட்டது. பொதுப்பணித்துறை போடும் சாலைகள் தரம் இல்லாமல் காணப்படுகின்றன. பள்ளி வகுப்பறை, அரசு அலுவலகங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் தரம் மிகவும் மோசமாக உள்ளன. எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்ற நிலையில் உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என திமுக நினைக்கிறது. தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலத் திட்டங்களை முழுவீச்சில் செய்ய வேண்டும். ரம்ஜான், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் திமுக அரசு, ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் சர்க்கரை, இனிப்பு கொடுக்கலாம். அரசு ஊழியர்களுக்கு போனஸ், கொடுக்கலாம். திமுக அரசு மக்களை ஏமாற்றுவதுபோல, அரசு ஊழியர்களையும் ஏமாற்றுகிறது. ரம்ஜான், கிறிஸ்மஸ்க்கு சலுகை, தீபாவளிக்கு புறக்கணிப்பா? திமுக அரசுக்கு ஜால்ரா போடுவதற்காகவே கமலஹாசன், திருமாவளவன் போன்றோர் புறப்பட்டுள்ளனர். இதே செந்தில் பாலாஜி குறித்து கரூரில் கமலஹாசன் ஏற்கனவே பேசியது என்ன? ஆனால் இப்போது செந்தில் பாலாஜி வந்ததால்தான் அதிக உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றினோம் என்று கூறி ஜால்ரா அடிக்கிறார். தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமாக பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை நடக்கிறது. இதை கண்டித்துப் பேச வக்கில்லாமல், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம்து, பாஜக, RSS ஆகிய அமைப்புகள்மீது தொடர்ந்து விமர்சனம் செய்து, கம்யூனிஸ்டுகளும் விடுதலை சிறுத்தைகளும் திமுகவின் அடிவருடிகளாக மாறிவிட்டார்கள். விஜய் கூட்டத்தில் அசம்பாவிதம் நடந்தது விட்டதால் எல்லா எதிர் கட்சிகளுக்கும் திமுக அரசு தடை விதிக்கிறது. ஆளும் கட்சியின் குறைகளை சுட்டி காட்டினால் கைது செய்கிறார்கள். ஆனால் இந்துக்களை விமர்சனம் செய்யும் திக போன்ற கட்சிகளுக்கு அனுமதி தருகின்றனர். வீரமணியின் அறக்கட்டளைக்கு மு க ஸ்டாலின், மக்கள் வரிப்பணத்தில் இருந்து 2.50 கோடி ரூபாயை வழங்குகிறார். இந்த அக்கிரம ஆட்சி அகல வேண்டும். எதிர்க்கட்சிகள் வலிமை பட வேண்டும். பாஜக அதிமுக கூட்டணி வலிமை அடைய வேண்டும். மக்கள் விரோத திமுக அரசை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் நாமக்கல்லில் பேட்டியின்போது கூறினார்.

Similar News