ஞாயிற்றுக்கிழமைகளிலும் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

Update: 2025-10-08 06:11 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை கரீப் 20025-26-ம் ஆண்டு குறுவை பருவத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நாகை மாவட்டம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து அவர்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வருகிற 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும். எனவே, விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News