நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் சங்குகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், வனச்சரக அலுவலர்கள் வேளாங்கண்ணியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், வேளாங்கண்ணி கடற்கரையில், கடல் சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்த வேளாங்கண்ணியை சேர்ந்த ஜான், வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்த ராமசாமி ஆகிய 2 பேரை வனத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.