நாகூர் சம்பா தோட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
நாவல் மரங்களின் சிறப்பு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்;
நாகை மாவட்டம் நாகூர் கிரசன்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நாகூர் அருகே சம்பா தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் எம்.மாலதி தலைமை வகித்தார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன், மாவட்ட ஆட்சியரக பசுமை தோழர் கே.ஷானு ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் எல்.சியாம் சுந்தர் கலந்து கொண்டார். 3-ம் நாளான நேற்று வனத்துறை சார்பில், வன உயிரின வார விழா முகாமில், வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட வேண்டிய ஆலிவ்ரெட் ஆமை, பருந்து, வெண்தலை ஆந்தை குறித்து ஒலி ஒளி காட்சி மூலம் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கு, மரம் நடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாவல் மரங்களின் சிறப்பு குறித்து மாணவிகள் அறிந்து கொண்டனர். கருத்தாளர்களாக வனவர் எஸ்.அகிலா, வனக் காப்பாளர் எம்.ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் பி.விஜய சோபியா, உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.