திருக்குவளையில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர் தினத்தை முன்னிட்டு

பாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசு;

Update: 2025-10-10 04:25 GMT
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாலயம் முதியோர் இல்லத்தில், சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட சமூக நல அலுவலர் கி.திவ்ய பிரபா அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற விழாவில், கருணாலயம் முதியோர் இல்லத்தின் மேற்பார்வையாளர் ஏ.அமுதா தலைமை வகித்தார். விழாவில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ஷர்மிளா, மாவட்ட பாலின நிபுணர் ப.சுந்தரி, கணக்கு உதவியாளர் சி.அருண்குமார், வழக்கு பணியாளர் யமுனா, மனநல மருத்துவர் மீனாட்சி, மருத்துவர் வேதையன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முதியோர்களுக்காக பாட்டுப் போட்டி, கோலம் போட்டி, இசை நாற்காலி, நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், கருணாலயம் முதியோர் இல்ல கணக்காளர் ரஷ்யா, உதவியாளர் எஸ்.தீபா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில், செவிலியர் துர்கா நன்றி கூறினார்.

Similar News