டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற உலக மன நாள் தினம்.
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் "உலக மன நாள் தினம்" அனுசரிக்கப்பட்டது.;
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மனநல திட்டக்குழு மன நல மருத்துவர் ஜி. பிரசாந்தினி மற்றும் சமூக ஆர்வலர் எம். முருகவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.உடல்நலம் நன்றாக இருந்தால் தான் மன நலனும் நன்றாக இருக்கும். தினமும் 8 மணி நேர தூக்கம் நம் அனைவருக்கும் அவசியம். மன அழுத்தம், தூக்கம் வராமை, தேவையில்லாத சிந்தனைகள் போன்றவை நம் மனநலனை பாதிக்கும். தற்போது தொடுதிரை அலைபேசி மூலம் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் போன்றவைகளை நாம் பதிவேற்றம் செய்து நம் பொன்னான நேரத்தினை மேற்கண்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடுகிறோம். அளவிற்கு அதிகமாக இதனை நாம் பயன்படுத்துவதால் நம் மனநலன் பாதிப்படைகிறது என்றார். சமூக வலைதளங்கள் நம் முன்னேற்றத்திற்கும், இந்த சமுதாய வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று அவர்கள் இந்நிகழ்வில் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் வீ.கலைவாணி உட்பட இவ்வமைப்பின் மாணவிகள் கலந்து கொண்டனர்.