கீழையூரில் இடித் தாக்கி சிறுவன்

.படுகாயம் - தீவிர சிகிச்சை;

Update: 2025-10-12 13:16 GMT
நாகை மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவரது மகன் தீபராஜ் (13), இவர் திருப்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது இடித் தாக்கியதால் தீபராஜ் மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபராஜ்க்கு வெளிக் காயம் ஏதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News