தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின்

16-வது கிளை மாநாடு - புதிய நிர்வாகிகள் தேர்வு;

Update: 2025-10-14 07:44 GMT
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 16-வது கிளை மாநாடு நா.சத்தியசீலன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, மு.பத்மநாதன் தலைமை வகித்தார். கே.கார்த்திகேயன் வரவேற்றார். ச. தமிழ்செல்வம் அஞ்சலியுரையாற்றினார். மாநாட்டினை, மாவட்டத் துணைச் செயலாளர் முனைவர் சீ.பி.செல்வம் தொடங்கி வைத்தார். வேலையறிக்கையை, கிளைச் செயலாளர் ஏ.வி.எம்.பகத்சிங்கும், நிதிநிலை அறிக்கையை கிளைப் பொருளாளர் கே.டி.முருகையனும் தாக்கல் செய்தனர். மாநாட்டில், கிளைத் தலைவராக மு.பத்மநாதன், செயலாளராக ஏ.வி.எம்.பகத்சிங், பொருளாளராக கே.கார்த்திகேயன், துணைத் தலைவர்களாக கே.டி.முருகையன், ரா.தியாகசுந்தரம், ஜீ.வி.ராகவன், துணை செயலாளர்களாக ரா.சிவனேசன், மூ.சுதாகர், அ.வேலுச்சாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.நடராஜன் நிறைவுரையாற்றினார். முடிவில், மூ.சுதாகர் நன்றி கூறினார்.

Similar News