தீபாவளி திருநாள் முன்னிட்டு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும் எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி திருநாள் 2025 முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் 1,10,257 பயனாளிகளுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.;
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நியாய விலைக்கடையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தீபாவளி திருநாள் 2025-ஐ முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் இராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த 22,264 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, மகளிர் சுய தொழில் தொடங்கிட கடனுதவி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000/-வழங்கும் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு உதவித்தொகையை ரூ.1,000/- லிருந்து ரூ.1,200/- ஆக உயர்வு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள்.மேலும், வருவாய்த்துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் பெறும் பயனாளிகளுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு இலவச சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில் 12,823 நபர்களுக்கும், இராசிபுரம் வட்டத்தில் 22,254 நபர்களுக்கும், திருச்செங்கோடு வட்டத்தில் 21,540 நபர்களுக்கும், பரமத்தி வேலூர் வட்டத்தில் 6,407 நபர்களுக்கும், கொல்லிமலை வட்டத்தில் 911 நபர்களுக்கும், சேந்தமங்கலம் வட்டத்தில் 13,364 நபர்களுக்கும், குமாரபாளையம் வட்டத்தில் 27,585 நபர்களுக்கும், மோகனூர் வட்டத்தில் 5,363 நபர்களுக்கும் என மொத்தம் 1,10,257 நபர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், இன்றைய தினம் இராசிபுரம் நியாய விலைக்கடையில் 22,254 நபர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் க.பா.அருளரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.