நாமக்கல்லில் நடைபெற்ற பசுமை மாநாட்டில் முன்னோடி விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு!
நாமக்கல்லில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விவசாயிகள் கண்காட்சியில் ஏராளமான இளம் விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.;
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள பிஜிபி வேளாண்மை கல்லூரியில் கண்ட்ரி பார்ம்ஸ் மீடியா மற்றும் விருட்சம் ஃபவுண்டேஷன் சார்பில், ரேரோ இணைப்பில் பி.ஜி.பி. நாமக்கல் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பசுமை மாநாடு-2025 நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பசுமை மாநாடு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிறைவு விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த முன்னோடி விவசாயிகளுக்கு 10 பேருக்கு விருது வழங்கி பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.நிறைவு விழாவில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுபாஸ் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினர்.பிஜிபி கல்வி நிறுவன தாளாளர் கணபதி,பிஜிபி வேளாண் கல்லூரி முதல்வர் கோபால், விருட்சம் பவுண்டேசன் நிறுவனர் முரளிதரன் கண்டரி பார்ம்ஸ் யூ டியூப் சேனல் சுவாமி நாதன், பசுமை மா.தில்லை சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.வேளாண் கண்காட்சி அரங்குகளை நாமக்கல் சனு இன்டர்நேஷனல் ஹோட்டல் நிறுவனர் சத்தியமூர்த்தி திறந்து வைத்தார். முதல் நாள் கருத்தரங்கில் வேளாண்மையில் ஐஓடி மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு” என்ற தலைப்பில் நடந்த குழு விவாதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஃபார்ம் அகேன் நிறுவனர் பென்ஜமின் மற்றும் முன்னோடி விவசாயி பாமயன் தன்னுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.அதனைத் தொடர்ந்து, கேரளாவிலிருந்து வந்த பெடல்ஸ் கார்டனிங் நிபுணர் ரமாபாய் , டிராகன் பழ வளர்ப்பில் தன்னுடைய சிறப்பு அனுபவங்களைப் பகிர்ந்தார். மேலும், சத்யம் பயோ சார்பாக வந்த பிரதிநிதிகள், தங்களின் முக்கியமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்கள் , கருத்தரங்கில் கால்நடை அபிவிருத்தி மையம் தலைவாசல் கிருஷ்ண குமார் தமிழக அரசால் 1000 ஏக்கரில் அமைந்துள்ள கால்நடை அபிவிருத்தி மைய செயல்பாடுகள் கால்நடை வளர்ப்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள் பற்றி சிறப்பாக உரையாற்றினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் ஏராளமான விவசாய பெரு மக்கள், வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.நிறைவாக பசுமை மாநாடு ஒருங்கிணைப்பாளர் சூரஜ் முரளிதரன் நன்றி உரை ஆற்றினார்.ஈரோடு சவுண்ட் மணி அவர்களின் மரபு கலை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.நாமக்கல்லில் இரண்டு நாட்கள் நடைபெற்ற விவசாயிகள் கண்காட்சியில் ஏராளமான இளம் விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டினர், வரும் காலத்தில் இளம் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பல்வேறு புதிய யுத்திகளை மேற்கொண்டு விவசாய மேற்கொள்ள கண்காட்சியில் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.நிலைத்த மற்றும் இயற்கை வேளாண்மையில் பெரும் ஆர்வத்தையும் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாகவும் அனுபவம் வாய்ந்த இயற்கை வேளாண்மை கால்நடை வளர்ப்பு விவசாயிகளோடு நேரடியாக கலந்துரையாடும் அனுபவ பகிர்வாகவும் இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற பசுமை மாநாடு ஏற்படுத்தியது என்று பசுமை மாநாட்டிற்கு வருகை தந்த விவசாய பெருமக்கள் மற்றும் வேளாண்மை கல்வி பயிலும் மாணவ மாணவிகளும் தெரிவித்தனர்.