இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி

மதுரை திருமங்கலம் அருகே இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-10-16 11:54 GMT
மதுரை திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்த மூவேந்திரன்( 34) என்ற மீன் வியாபாரிக்கு குருசியா (23) என்ற மனைவியும், நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மூவேந்திரன் அடிக்கடி குடிபோதையில் வீட்டாருடன் தகராறு செய்ததால் விரக்தி அடைந்த குருசியா, நேற்று (அக்.14) அதிகாலையில் குழந்தைகளையும் துாக்கில் தொங்கவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற போது குழந்தைகள் வலியில் துடிப்பதை பார்த்த குருசியா உடனே தன்னை விடுவித்துக் கொண்டு குழந்தைகளையும் மீட்டார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News