பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-10-16 15:35 GMT
நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட திண்டமங்கலம், நருவலூர், தளிகை, மாரப்பநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல், மாவட்ட ஆட்சியர் நாமக்கல் ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சி மயானத்தில் அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.11.80 இலட்சம் மதிப்பீட்டில் எரிமேடை, சுற்றுச்சுவர், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட்டு வருவதையும், நருவலூர் ஊராட்சி தொட்டிபாளையம் – தட்டாரபாளையம் மயானத்தில் ரூ.63,912/- மதிப்பில் மண்புழு உரக்கொட்டகை அமைத்துள்ளதையும், நருவலூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்று நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும், அதே பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருமதி சிவகாமி என்பவரின் வீடு கட்டப்பட்டு வருவதையும், தளிகை பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.45.31 இலட்சம் மதிப்பீட்டில் சின்னதளிகை குட்டை தோட்டம் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், மாரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி செங்கோடம்பாளையத்தில் ரூ.6.08 இலட்சம் மதிப்பில் 10,000 எண்ணிக்கையில் மரக்கன்று நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் கீரம்பூர் நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News