காவேரிப்பட்டணத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
காவேரிப்பட்டணத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் கவிதா தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் பலர் பேசினர். அப்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியாக 600 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.