குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-10-17 15:05 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா , மாவட்ட ‌ ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் முனைவர் மோ.கசிமீர் ராஜ் , மருத்துவர் மோனா மட்டில்டா பாஸ்கர் அவர்கள், மாண்புமிகு மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்புத் துறைகளுக்கான கூராய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டத்தில் RTE சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் சமூகம் மற்றும் பொருளாதார நலிவுற்றோர் பிரிவில் 147 பள்ளிகளில் 1591 மாணவர்கள் பள்ளி வாயிலாக 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் “மாணவர் மனசு” என்ற பெட்டி வைக்கப்பட்டு, வாரம் ஒருமுறை மாணாக்கர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2023-24 முதல் 2025-26 வரை பள்ளி இடைநின்ற 8000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் குழந்தைத் திருமணம் மற்றும் இளம் வயது கருவுற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த கிராமப் பகுதியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மூலமும் விழிப்புணர்வு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து நாமக்கல் மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாவட்டமாக மாற்றிடுவோம் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா தமிழ்நாடு அரசுப் பள்ளி விடுதிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் இல்லங்கள் (கட்டுப்பாடு) சட்டத்தின்படி குழந்தைகள் தங்குவதற்கான பதிவுபெற்ற விடுதிகள் மற்றும் பதிவு பெறாத விடுதிகள், இளைஞர் நீதிச் சட்டம் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத இல்லங்கள், குழந்தைத் திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள், குழந்தைத் தொழிலாளர் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் வழக்குகள், 18 வயதிற்குட்பட்ட இளம் வயது கர்ப்பம் தொடர்பான நிலை, குழந்தைகளின் போதிய ஊட்டச்சத்து கிராம, வட்டார, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு காலாண்டுக் கூட்டங்கள், குழந்தைத் திருமணம், போக்சோ, குழந்தைத் தொழிலாளர், இளம் வயது கர்ப்பம் அதிகளவு நடைபெறும் இடங்கள் கண்டறிந்து விழிப்புணர்வு செய்யப்பட்ட விவரங்கள், நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளின் நிலை, கொரோனா பேரிடரால் பெற்றோர் இருவர் அல்லது ஒருவரை இழந்த குழந்தைகளின் நிலை, குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் நிலை, பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் பயனுறும் குழந்தைகள், 1098 என்ற குழந்தைகளின் அரசு உதவி எண்ணில் பெறப்பட்ட புகார் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து குறைச் சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கித் குமார் ஜெயின், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட திட்ட அலுவலர் எப்.போர்ஷியா ரூபி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மு.கூ.பொ) செல்வி.ஈ.சந்தியா, பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) கோ.கற்பகம் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News