கோவையில் தீபாவளிப் பயண நெரிசல்: கொச்சின் பைபாஸ் முதல் சூலூர் வரை ஊர்ந்து சென்ற வாகனங்கள் !

தீபாவளி முன் சொந்த ஊர் செல்லும் மக்களின் திரளால் கோவை புறநகர் சாலைகள் முடங்கி நெரிசல்.;

Update: 2025-10-18 03:02 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் பெரும் திரளால் கோவை புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையாக ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. குறிப்பாக கொச்சின் பைபாஸ் சாலையிலிருந்து சூலூர் புதிய பேருந்து நிலையம் வரை வாகன நெரிசல் மிகுந்துள்ளது. சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் அங்கு பயணிகள் அலைமோதினர். இதனால் பேருந்து இயக்கங்களில் காலதாமதமும் ஏற்பட்டது. போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், போக்குவரத்து நெரிசலால் பயணிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

Similar News