கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்து தீப ஒளி திருநாளை குடும்பத்தோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடுவோம் ! கொங்கு ஈஸ்வரன் தீபாவளி வாழ்த்து செய்தி

தீபாவளி திருநாளில் அனைவருமே அவரவர் குடும்பத்தாரோடு ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இன்புற்று இருக்க இன்று ஏற்றுகின்ற இந்த தீப ஒளி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டுகின்ற ஒளியாக இருக்க வேண்டும்.;

Update: 2025-10-19 15:21 GMT
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது... தினம் தினம் கடுமையாக உழைப்பவர்களுக்கும், தினம் தினம் வேதனைகளை அனுபவிப்பவர்களுக்கும் கூட இந்த தீப ஒளி திருநாள் மகிழ்ச்சியை தரக்கூடியதாக எப்போதும் அமைந்திருக்கிறது. அனைத்து கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்து தீப ஒளி திருநாளை குடும்பத்தோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். மக்கள் படுகிற துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் வருடத்தில் ஒரு நாள் விடுமுறை விடுவது போல வருடா வருடம் இந்த தீபாவளி வருகின்றது. அப்படிப்பட்ட இந்த தீபாவளி திருநாளில் அனைவருமே அவரவர் குடும்பத்தாரோடு ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இன்புற்று இருக்க இன்று ஏற்றுகின்ற இந்த தீப ஒளி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டுகின்ற ஒளியாக இது இருக்க வேண்டுமென்று தீபாவளி திருநாள் வாழ்த்துகளை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Similar News