ராசிபுரம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.!
ராசிபுரம் அணைக்கும் கரங்கள் மனநலம் இல்லத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற முதியோர்கள் வாழ்ந்து வரக்கூடிய இல்லத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அவர்களது உணவு தேவைக்கு அரிசி மூட்டை கொடுத்து தீபாவளியை தமிழ்ப்புலிகள் கட்சி யின் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர் த.குமரவேல் தலைமையில் ஆதரவற்ற இளைஞர்கள் மற்றும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் சேகுவேரா, ஆதிதமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ராவண கோபி,மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் குமரவேல்,நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரமணி,ஒன்றிய பொறுப்பாளர் அன்பரசுஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் .