நாமக்கல் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடிய போக்குவரத்து காவலர்கள்
நாமக்கல் பழைய பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த போக்குவரத்து காவலர்கள் பயணிகளுக்கு இனிப்பு அதிர்ச்சி தந்தனர்.;
தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி அன்று நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், பஸ்ஸில் இருந்த பயணிகள், ஓட்டுநர், நடத்துநர், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி போக்குவரத்து காவலர்கள் இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.