நாமக்கல்லில் அலையன்ஸ் கிளப் அறிமுக ஆலோசனை கூட்டம்!

ஆலோசனை கூட்டத்தில் அலையன்ஸ் கிளப் துவங்குவது பற்றியும் உறுப்பினர்களை அதிக படுத்துதல் செயல்பாடுகள்,சேவைகள், பற்றி விவாதிக்கப்பட்டது.;

Update: 2025-10-21 10:30 GMT
நாமக்கல்லில் புதிதாக தொடங்கப்பட உள்ள அலையன்ஸ் கிளப்பின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் - பொய்யேரிகரையில் உள்ள செல்லம் சென்டர் வணிக வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு புதன்சந்தை பந்தம் பவுண்டேசன் நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.பில்டர்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் இன்ஜினியர் மணி, காமராசர் கல்வி நிறுவனங்கள் முதல்வர் காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை பாரதமாதா சிலம்ப பயிற்சியாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.ஆலோசனை கூட்டத்தில் அலையன்ஸ் கிளப் துவங்குவது பற்றியும் உறுப்பினர் களை அதிக படுத்துதல் செயல்பாடுகள்,சேவைகள், பற்றி விவாதிக்கப்பட்டது.நிகழ்வில் தங்கராஜ்,பன்னீர் செல்வம், விஜயகுமார் ஜோஷாப் கென்னடி, தினேஷ், மாரிமுத்து பாலகிருஷ்ணன், தீபக்குமார் , நானேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக ஜோதிடர் ஜெகதீஷ்வரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Similar News