நாமக்கல்லில் மது போதையில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்.
நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
நாமக்கல் அடுத்த மேற்கு காவேட்டிபட்டியை சேர்ந்தவர் பாஸ்கர். ஆட்டோ டிரைவரான இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதுபோதையில் வந்த பாஸ்கர் இரவு மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டின் அறையில் இருந்த சித்ராவை வேஷ்டியால் கழுத்தை நெருக்கி கொலை செய்துள்ளார். அங்கிருந்து அவர் தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில் காலையில் சித்ராவை அவரது இளைய மகன் எழுப்பிய நிலையில், கழுத்து மற்றும் வாயில் ரத்தம் வந்தநிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஸ்கர் குறித்து போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் நேற்று நாமக்கல் அடுத்துள்ள கொசவம்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது