நாமக்கல் கந்தசாமி கண்டர் பள்ளியில் சிவப்பு நிற தினவிழா கொண்டாட்டம்!
மாணவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வசீகரமான சிவப்பு வண்ண ஆடைகளில் சூழ்ந்து உற்சாகத்துடன், அன்பு மற்றும் தைரியத்தின் உணர்வுகளைத் தூண்டும் இனிமையான, இணக்கமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலை உருவாக்கினர்.;
நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேஷன் பள்ளியில், சிவப்பு தின விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு சிவப்பு நிறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் ரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அவர்களின் உற்சாகத்தையும், ஆராய்வதற்கான ஆர்வத்தையும் தூண்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும். எல்.கே.ஜி., முதல், இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வசீகரமான சிவப்பு வண்ண ஆடைகளில் சூழ்ந்து உற்சாகத்துடன், அன்பு மற்றும் தைரியத்தின் உணர்வுகளைத் தூண்டும் இனிமையான, இணக்கமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலை உருவாக்கினர். ஆசிரியர்களும் சிவப்பு நிறத்தில் ஆடையணிந்து விழாவை சிறப்பித்தனர்.பள்ளி செயலாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.