நாமக்கல் புதுச்சத்திரம் பகுதிகளில் தனியார் தொழிற்சாலை ஆன கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் ஆய்வு.

நாமக்கல் தமிழகத்தில் மழையால் சேதம் அடைந்த நெல்மணிகளை ஆய்வு செய்யும் மத்திய நெல் குழு தமிழகம் வந்துள்ளது.;

Update: 2025-10-25 13:40 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 சதவீதம் நெல் ஈரப்பதம் கொண்ட நெல் மணிகளை கொள்முதல் செய்யும் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது.இந்த நிலையில் திருச்சி தஞ்சாவூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளபடாத நிலையில் நாமக்கல் புதுச்சத்திரம் பகுதிகளில் தனியார் தொழிற்சாலை ஆன கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.கோதுமை அரிசி மக்காச்சோளம் பொருள்களை கொண்டு சத்துமாவு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.தமிழக அரசுக்கு சத்துமாவு, முட்டை, பருப்பு வழங்கும், கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு கிறிஸ்டி ஃபிரைடுகிராம் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.செறிவூட்டப்பட்ட அரசி ஆலையில் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய குழுவில் 8 பேர் அடங்கிய குழு ஆலையில் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் 3 நபர்களும் மத்திய அரசில் 5 நபர்களும் உள்ளனர். அந்த குழுவில் சகி, ராகுல் சர்மா, தமிநாட்டில் மணிகண்டன் என்ற அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ராசி ஃபுட்ஸ் என்ற தனியார் ஆலையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலையில் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி செய்யப்பட்டு தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப் படுகிறது, இங்கு எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது?, எவ்வளவு இருப்பு உள்ளது? இம்மாதம் பொது விநியோக திட்டத்திற்கு எவ்வளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய குழுவை சேர்ந்த அதிகாரிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

Similar News