நவோதயா மாணவர் கரூரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் இரண்டாம் பரிசு.
தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்கேட்டிங் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.;
2025 ஆம் ஆண்டிற்கான 15ஆவது ஸ்கேட்டிங் போட்டி கடந்த வாரம் கரூரில் நடத்தப்பட்டது. அதில் நமது நவோதயா பள்ளி மாணவர் மோனிஸ் (ஆறாம் வகுப்பு) கலந்துகொண்டு ஸ்கேட்டிங் தொடர் ஒட்டத்தில் இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளார். இன்று பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் தேனருவி சான்றிதழ் வழங்கி பதக்கத்தை அணிவித்து மாணவரை வாழ்த்தினார். அவர் பேசுகையில் “மாணவர் மோனிஸ் மேன்மேலும் பலபோட்டிகளில் வெற்றி பெற்று ஒரு சாதனையளராக வளரவேண்டும் என்று வாழ்த்தினார்.” பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சகமாணவ மாணவியர்கள் அனைவரும் மாணவரை பாராட்டி வாழ்த்துகளைத் கூறினார்கள்.