தேசிய நெடுஞ்சாலை பணிக்காக ஏரியிலிருந்து மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது.

திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.;

Update: 2025-10-27 13:03 GMT
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே பள்ளக்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்அந்த மனுவில்:- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளக்குழி அருகே ஈச்சங்காடு பெரிய ஏரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மண் அள்ளுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ்வரன் தன்னிச்சையாக முடிவெடுத்து விபரம் தெரியாத பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மண் அள்ள அனுமதிக்க கூடாது, ஏரியில் குடிமரத்து பணியின் போது மண் அள்ளப்பட்டதால் ஏரியின் கரையும், மதகும் பலவீனமாக இருக்கின்றன அதனால் நஞ்சை நில விவசாயிகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றோம் எனவே ஏரியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மணல் அல்ல உரிமம் வழங்கக் கூடாது, காவிரி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக கிராம மக்கள் கூறினர்.

Similar News