தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக இருக்கும் சாமி சிலைகள்! விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு பொன்.மாணிக்கவேல் அதிரடி
சுதந்திரத்திற்கு முன்பு இது போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டால் அவைகள் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்பட்டது;
நாமக்கல் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது...கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதே போல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டால் அதனை அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களுக்கு வழங்கி பூஜை செய்யாமல் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்படுவதாகவும், இதனை மீட்டெடுக்க விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார், மேலும் சுதந்திரத்திற்கு முன்பு இது போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டால் அவைகள் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், சுதந்திரத்திற்கு பின்பு தான் அவை வெறும் காட்சி பொருளாக வைக்கப் படுவதாகவும் தெரிவித்தார்.