கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாமக்கல் பாலதண்டாயுதபாணிக்கு தங்க கவச அலங்காரம்!

மாலையில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.;

Update: 2025-10-27 16:31 GMT
நாமக்கல்- மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் கணபதி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சக்தி ஹோமமும், சுப்பிரமணியர் ஹோமமும் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது பின்னர் பாலதண்டாயுதபாணி சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News