நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்!
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் லஞ்ச ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க அறிவுறுத்தினார்.;
நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர் முகாமில் கலந்து கொள்ள வருகை தந்த பொதுமக்களிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் லஞ்ச ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.