ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது!
அரசு அலுவலகங்களில் தங்களுடைய கடமையை செய்ய லஞ்சம் கேட்டால் மாணவர்கள் கொடுக்காமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும் என கூறி லஞ்சம் கொடுப்பதும் லஞ்சம் வாங்குவதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்;
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர பாண்டியன் (பொ) தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பிரபு கலந்துகொண்டு அரசு அலுவலகங்களில் தங்களுடைய கடமையை செய்ய லஞ்சம் கேட்டால் மாணவர்கள் கொடுக்காமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும் என கூறி லஞ்சம் கொடுப்பதும் லஞ்சம் வாங்குவதும் குற்றம் என எடுத்துரைத்தார்.லஞ்ச ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளித்து, உற்சாகப்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஒவ்வொரு மாணவ மாணவியரும் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்தி உறுதி ஏற்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ மாணவியர், ஆசிரியர் இல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளரும் தாவரவியல் துறை இணை பேராசிரியருமான வெஸ்லி செய்திருந்தார்.