எருமப்பட்டியில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
எருமப்பட்டி பேரூர் வட்டார காங்கிரஸ் சார்பாக மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
இந்திரா காந்தியின் 42 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டம் எருமப்பட்டி பேரூர் வட்டார காங்கிரஸ் சார்பாக மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் எருமப்பட்டி வட்டார தலைவர் தங்கராஜ் ,பேரூர் தலைவர் பெருமாள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தனபால், நடேசன், ராமசாமி ,முத்துசாமி ஆறுமுகம், நலவாரிய மாநில பொறுப்பாளர் பாமா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்திராகாந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.முன்னதாக வாக்குத்திருட்டை ஒழிப்போம் என்று முழக்கமிட்டு அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.