தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் - தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு.
சில ஊர்களில் முக்கியமான நபர்களைச் சொன்னால் எல்லோருக்கும் தெரியும். சில நகரங்களின் பெயர்களைச் சொன்னால் எல்லோருக்கும் தெரியும். சில பட்டணங்களின் பெயரைச் சொன்னால் நாடே அறியும்.;
ஆனால், நாமக்கல் என்று சொன்னால், இந்த உலகம் அறியும் வகையில் சிறந்த மண்ணுக்குச் சொந்தமான இந்த நாமக்கல்.விண் உயர்ந்து நிற்கும் ஆஞ்சநேயரின் அருள் உலகம் எங்கும் பரவி வரும் அளவுக்கு இந்த நாமக்கல் சிறந்த மண்ணாக விளங்குகிறது. நாமக்கல் நாமகிரி நமது அம்மன் மிகச் சிறந்த அருள் பாலிக்கும் ஊராக இந்த நாமக்கல் திகழ்கிறது.இங்கே இருக்கிற மலையின் ஓரத்தில் நரசிம்மன், நாமக்கல்லின் இலக்கணமாக, ஓர் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். இதே மண்ணில்தான், சட்டமேதை அம்பேத்கர் உருவாக்கிய நமது பகுதியைச் சேர்ந்த பெரியவர், ஐயா காளி அண்ணன் பிறந்த ஊர் இந்த நாமக்கல்.தேசிய கவிஞர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊர் இந்த நாமக்கல்.மதிப்பிற்குரிய நாமக்கல் கவிஞர் வெங்கட்ராமன் பிள்ளை, "கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது... ஒற்றுமையுடன் வாரீர்" என்ற வரிகளைச் சொன்னவர். அவர் பிறந்த மண் இது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மண்ணில், இன்றைக்கு எல்லோரும் ஒன்றுசேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்ல வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அனைவரும் ஒன்றுபட்டு இந்தக் கூடி இருக்கிறோம். ஒன்றுபடுவோம், வெல்வோம்! அதற்கான சபதம் ஏற்கும் நாளாக இன்று இருக்கிறது. எட்டு கிலோமீட்டர் தாண்டிப் பேருந்து நிலையம் இருக்கிறது. அங்கே ஒரு பேருந்துகூட நிற்பதில்லை. 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுத்தோம். தமிழ்நாட்டிற்குக் கொடுத்தது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். வாங்கிக் தந்தது அண்ணன் எடப்பாடி அவர்கள். அந்த 11 மருத்துவக் கல்லூரிகளில், தமிழ்நாட்டில் 11-ல், நாமக்கல்லில் ஒன்று வாங்கிக் கொடுத்தவர் தங்கமணி அவர்கள். இது போன்ற நல்ல திட்டங்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டும். அதை யார் செய்ய முடியும்? மக்கள்தொண்டனாக இருக்க வேண்டும், மக்கள் நலன் தெரிந்த தலைவராக இருக்கும் கட்சிகள்தான் செய்ய முடியும். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழி வந்த கட்சி அதிமுக. அதனால்தான் தலைவர்கள் மக்கள் பணியாற்றுகிறார்கள். இங்கே இருக்கும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்... அவர் சொன்னால் இவர் கேட்பதில்லை, இவர் சொன்னால் அவர் கேட்பதில்லை. இப்படி எப்படி நல்ல திட்டங்கள் வரும்?நாமக்கல் மாவட்டம் என்று சொன்னாலே, கோழி முட்டைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம். உலகம் எங்கும் போவதற்கு நாமக்கல் கோழி முட்டைகளைத்தான் எல்லோரும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள்.தேர்தல் அறிக்கையில் பெரிய குளிர்சாதன (Cold Storage) பெரிய குடோன் அமைத்துத் தருவோம் என்று சொன்னார்கள். மரவள்ளிக் கிழங்குக்கு அதிக விலை தருவோம் என்று சொன்னார்கள். இங்கே அதிகமாக விளையும் மாம்பழத்துக்கு ஆதரவு விலை தருவோம் என்று சொன்னார்கள். எதையுமே அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது, இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் செய்யவில்லை.குடிநீர்த் தட்டுப்பாடு, சரியான குடிநீர் இல்லை. அதே நேரத்தில், ஆதிதிராவிடர் நல்ல விடுதியில் அங்கே குழந்தைகளுக்குச் சரியான உணவு இல்லை. உணவு அருந்திய மாணவர்கள் விஷக்காய்ச்சலில் மருத்துவமனைக்குச் சென்ற விஷயங்களை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.எவ்வளவு ஒரு மோசமான சூழ்நிலையில் கடந்த நான்கரை வருட காலமாக திமுக அரசின் செயல்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. நாமக்கல் மாவட்டம் என்று சொன்னால், மற்றொரு அடையாளம் கொல்லிமலை. மூலிகை அதிகமாக இருக்கின்ற நமக்குக் கிடைக்கின்ற பகுதி இந்த கொல்லிமலை. அதிகமான மூலிகைகளையும், தானியங்களையும் கிடைக்கக்கூடிய நமது கொல்லிமலை, இன்றைக்கு அதைச் சுற்றி இருக்கின்ற பகுதி மோசமான சூழ்நிலையில் உள்ளது.கிழக்குத் தொடர்ச்சியின் பகுதியில் சுற்றியுள்ள எல்லா கனிம வளங்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் திருடிப் போய்க்கொண்டு உள்ளது. அரசுக்கு ராயல்டி வருவதில்லை. கனிம வளம் தான் திருட்டு என்று சொன்னால், நாமக்கல்லில் சிறுநீரகமும் (கிட்னி) திருடிக் கொண்டிருக்கிறார்கள் திமுககாரர்கள். திருச்சி சென்றாலும் சிறுநீரகம் திருடுகிறார்கள். எங்கே போனாலும் கவனமாகப் போங்கள். எந்த மருத்துவமனைக்குப் போனாலும், தனியார் திமுக மருத்துவமனைக்குப் போனால் கொஞ்சம் கவனமாக இடுப்பைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறுநீரகத்தைத் திருடிவிட்டுப் போகிறார்கள். அந்த அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையில் நாடு போய்க்கொண்டுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் ஆட்சிக்கு முடிவு கட்டும் நாளாக அமைய வேண்டும்.(சம்பவம்: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்) கல்லூரியில் ஒரு மாணவியை காவல்துறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். பிறகு, காவல்துறைக்கு மனு கொடுக்கப் போன ஒரு சகோதரி, தனது அண்ணனைப் பார்க்கப் போனவர். அங்கே இருக்கும் காவல்துறை சாதிப் பெயரைச் சொல்லி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி உள்ளார்கள். அவர்களைக் கேவலமாகப் பேசி உள்ளார்கள். இது யாரால் நடக்கும் என்று சொன்னால், திமுகவால் மட்டும்தான் நடக்கும். அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது இது மாதிரி நடக்குமா? அண்ணன் எடப்பாடி இருக்கும்போது இது நடந்ததா? இதுவரை கிடையாது. காரணம், சட்டத்தின் ஆட்சி நடந்தது. இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை; குடும்பத்தின் ஆட்சி நடக்கின்றது.மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்கள், அவரின் மகனுக்காக, துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்காக, இப்போது நடத்தப்படும் தேர்தலில் இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு போராடுகிறார்கள்.சார்' என்று சொன்னாலே, எந்த சார் என்று தெரியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் இரவு 8 மணிக்கு ஒரு பெண்ணைத் தனியாகக் கூட்டிச் சென்று, போனை கையில் கொடுத்து, அந்த சாரிடம் பேசுங்கள் என்று கூறுகிறார்கள். அது எந்த சார் என்று தெரியவில்லை. அவர்களுக்கு அந்தச் சாரைப் பார்த்தும் பயம். முதலமைச்சருக்கு இப்போது வாக்கெடுப்பு (தேர்தல்) இந்தச் சாரைப் பார்த்து பயம். வாக்காளர்களைச் சேர்ப்பதும், நீக்குவதும், இறந்தவர்களை நீக்குவதும் - படிவம் 6, 7, 8 - இது எல்லா காலங்களிலும் நடைபெறும் ஒன்று. ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு வாக்கெடுப்பு நடத்தும் போது இவர்களுக்கு ஒரு பயம் வந்துள்ளது. என்ன பயம் உள்ளது உங்களுக்கு? இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்தால், தேர்தல் நடந்து முடிந்தது மாதிரி. எல்லாத் தொகுதிகளிலும், குமரிமுடியில் இருந்து கன்னியாகுமரி வரை 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.காரணம், எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கும் இடம் எங்கே உள்ளது என்றால்... முன்னாடிக் எல்லாம் ஒளிவும் மறைவாக விற்பார்கள். கள்ளச் சாராயமும் விற்பனை நடந்துள்ளது, இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றால், பள்ளிக்கூட வாசலில் விற்கிறார்கள், கல்லூரி வாசலில் விற்கிறார்கள் - கஞ்சா, இன்னொன்று மெத் (Methamphetamine).நான் இதை வேடிக்கையாகச் சொல்லவில்லை, வேதனையாகச் சொல்கிறேன். இன்றைக்கு மக்கள் படும் துயரத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் 65 பேர் இறந்து போனார்கள். யாருடைய ஆட்சியில்? மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில்.எப்படி இறந்து போனார்கள்? கள்ளச் சாராயம் குடித்து. கரூரில் 41 பேர் இறந்து போனார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள், அவர்கள் பயணத்தின்போது அங்கே பேருந்து நிற்கிறது. அந்தக் கழகத்தின் தலைவர் மேலே வருகிறார். பத்து ரூபாய் பாட்டில்! பத்து ரூபாய் பாட்டில்! என்று பாட்டுப் பாடுகிறார். அது திமுககாரன் பத்து ரூபா பாட்டிலுக்கு கமிஷன் வாங்குவான். அந்த பத்து ரூபா பாட்டில் கமிஷன் அமைச்சருக்குப் போகிறது. அந்தப் பாட்டைப் பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டவுடன், உடனே செருப்பைக் கழற்றி வீசுகிறார்கள். மின்சாரம் நிறுத்தப்படுகிறது. தடியடி (லாத்தி சார்ஜ்) செய்யப்படுகிறது.அதில் மூன்று வயது குழந்தை, பத்து வயது குழந்தை நசுங்கிச் சாகிறார்கள். ஒரு தாய், 40 வயது தனது கணவனை இழந்த தாய், பத்து வயது பையனைக் கூட்டிக்கொண்டு அங்கே செல்கிறாள். அந்தக் கூட்ட நெரிசலில் தனது கண் முன்னால் அந்தப் பத்து வயதுச் சிறுவனை மிதித்து எல்லோரும் கூட்டத்தில் மிதித்து ஓடுகிறார்கள். தனது கண் முன்னால் துடிதுடித்துச் சாகிறான். இவள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வருகிறாள். இப்படி ஒரு கொடூரமான சம்பவம் எந்த ஆட்சிலாவது நடந்தது உண்டா? எந்த நாட்டிலாவது நடந்தது உண்டா? தமிழ்நாட்டைத் தவிர! முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் தான் நடக்கும்.காவல்துறை எஸ்.எஸ்.ஐ. பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். நேற்று கோயம்புத்தூரில்... கோயம்புத்தூர்தான் உலகத்தில் சிறந்த நாடு. தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சிறந்த பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் கோயம்புத்தூர். அந்தக் கோயம்புத்தூரில் இரவு 11 மணிக்கு ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், ஆறு கத்தியை வைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த ஆணை வெட்டுகிறார்கள். மயங்கிக் கீழே விழுகிறான். அந்தப் பெண்ணைத் தரதரவென்று இழுத்துப் போகிறார்கள். மூன்று பேர், நல்ல கஞ்சா போதையில், ஆடைகளைக் களைந்து பாலியல் வன்புணர்வு செய்து, அப்படியே முள் புதரில் போட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். அதன் பிறகு, இந்த பையன் போனில் பேசுகிறான். போலீஸ் 11 மணிக்கு வருகிறார்கள். எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு, விடியற்காலை நாலு மணிக்குத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று எழுந்து வந்தது. அதுவும் கோயம்புத்தூர் நகர்ப்புறத்தின் நடு மையத்தில் நடக்குது இந்தச் சம்பவம்.எவ்வளவு ஒரு துயரமான சம்பவம்! ஒரு பெண்ணைப் பெற்ற தாய்க்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும்? ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும்? இதை பாதுகாக்க வேண்டியது யார்? சட்டத்தின் ஆட்சியை கையில் வைத்துக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் அவர்களே! காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் இதை பாதுகாக்க வேண்டும்.எங்கே பார்த்தாலும் போதைப் பொருள்கள். தற்கொலை (சுயசைட்) அதிகம் என்றால், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகம். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு 10 பேர் இறந்து போகிறார்கள். தற்கொலைத் தலைநகரமாக இன்று இருந்து கொண்டிருக்கிறது.இதையெல்லாம் தயவுசெய்து புரிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, அதிமுக - பாஜகவுக்கு வாக்களியுங்கள். நரேந்திர மோடி அவர்கள், இந்தத் தமிழகத்துக்கு நிறைய திட்டங்கள் தந்துள்ளார். கோழிப் பண்ணைக்காகச் செயல்திட்டம் தந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு நாமக்கல்லில் ஏற்றுமதி இவ்வளவு தூரம் வருவது என்று சொன்னால், கோழிப் பண்ணை செயல்திட்டம் 2022 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்துள்ளார்.நாமக்கல் ரயில் நிலையத்திற்கு 9.4 கோடி ரூபாய் தந்துள்ளார். இப்படியாக, கிஷான் சம்மான் திட்டத்தில் 9 லட்சம் பேர் நாமக்கல் மாவட்டத்தில் 176 கோடி ரூபாய் தந்துள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தில் மூன்று லட்சம் பேர் பயன்பட்டுள்ளார்கள். இன்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்துள்ளார்கள். இந்தப் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் பகுதி. அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வன் தன் யோஜனா என்ற திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் தந்தது பழங்குடி மக்களுக்காக. பாஜக தந்தது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். சுய உதவிக் குழுக்கள் - 200 குழுக்கள் உருவாக்கி உள்ளார்கள். இதே மாதிரி நிறைய விஷயங்கள்.ஒன்றியம் தோறும் தானியக் கிடங்குகள் அமைப்போம்" என்று சொன்னார்கள். செய்தார்களா? இல்லை. "பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு நீர் மேலாண்மைத் திட்டம் தருவோம்" என்று சொன்னார்கள். தந்தார்களா? இல்லை. இதை நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். அதில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது அண்ணன் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அங்கே இருந்தார். இன்றைக்கு நம்முடன் இருக்கிறார். அந்த மேடை தேவையில்லை என்று சொல்லி இன்றைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி மேடையில் இன்று ராதாகிருஷ்ணன் அவர்கள் இருக்கிறார்.அந்தத் தேர்தல் அறிக்கையில் சொன்னது, "மோகனூர் - குமாரபாளையம் கால்வாய் ராஜவாய்க்கால் இணைக்கப்படும்" என்று சொன்னார்கள். கொண்டு வந்தார்களா? 154 கோடி மதிப்பில் அதிமுக காலத்தில் (தங்க)மணி அவர்கள் அந்தத் திட்டத்தைப் போட்டுள்ளார்கள். கதிராநல்லூர் - திருமலைப்பட்டி - கந்தூர் ஏரிகளை இணைக்கும் திட்டம் - இணைத்தார்களா? இல்லை.காவிரி - பெண்ணாறு இணைப்புத் திட்டம் என்னாச்சு? திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். என்ன ஆச்சு? ஒன்றும் கிடையாது.திருமணிமுத்தாறு - ஒகேனக்கல் காவிரி உபரிநீர் சேலம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குக் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். இதுவரை செய்து உள்ளார்களா? இதுவரை எதுவுமே செய்யவில்லை. அவர்கள் செய்ய இருப்பது மீண்டும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்குவதற்காகத்தான் இவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் மதிப்புக்குரிய திருமாவளவன், செல்வப்பெருந்தகை மற்றும் எல்லா கட்சிக் கூட்டணித் தலைவர்களிடம், "நீங்கள் போகிறீர்கள் என்று சொன்னால், கூட வாருங்கள்" என்று இழுத்துக்கட்டிவிட்டு, "எங்கள் கூட்டணி சரியில்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா?" என்று கேட்கிறார்கள். ஏன்? 1999 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது, பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்களே! அப்போதெல்லாம் உங்களுக்குக் கசந்தா போய்விட்டது? பாஜக என்று சொன்னால் உங்களுக்கு ஏழையாகத் தெரிகிறதா? உலகத்தின் மிகப்பெரிய கட்சி பாஜக. 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். இன்றைக்கு பீகார் மாநிலத்தில் அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், முதலமைச்சராக நிதிஷ் குமார் அவர்களை நாங்கள் வைத்துள்ளோம். அதேபோலத்தான், எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும், அதிமுக தமிழகத்தில் அண்ணன் எடப்பாடி அவர்களை முதலமைச்சர் ஆக்குவதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாங்கள் இன்றைக்குச் சபதம் எடுத்துள்ளோம். எங்கள் தேவை எல்லாம், தமிழகத்தில் திமுக வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஒரு ஆன்மீக ஆட்சி வேண்டும். எல்லோருக்கும் எல்லாருமாக ஆட்சி வேண்டும். சட்டத்தின் ஆட்சி வேண்டும். நாமக்கல்லுக்கு ஒரு நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்க வேண்டும்.