மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா. பொதுமக்களுடன் கொண்டாடிய திமுகவினர்.
மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா. பொதுமக்களுடன் கொண்டாடிய திமுகவினர்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்து நிலையம் அருகே முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதசாரிகள், வாகனங்களில் செல்பவர்களுக்கும் இனிப்புகள் வழங்கியதுடன் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் நிகழ்ச்சியில் A.முத்து, அப்துல் முனாப், சேகர், அம்மன் முனியாண்டி, கண்ணுத்து ராமசந்திரன்,அனந்தானூர் செல்வராஜ்,சபாபதி , ரெத்தின குமார், மணி கண்டன்,விஸ்வா, வெங்கடேஷ், ராமகிருஷ்ணன்,கதிர், சுரேஷ், ARG கோபால்,தெத்தூர் முருகேசன் மலர், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.