கபிலர்மலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
கபிலர்மலை மத்திய ஒன்றியம் திமுக சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.;
பரமத்திவேலூர்.,நவ.28: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கபிலர்மலை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கபிலர்மலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 450 மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜன்,கபிலர்மலை அரசு மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடிவேல், துணைத்தலைவர் அங்கமுத்து, ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் சக்திவேல், அமைப்பாளர் கார்த்திக் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.