மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாலையோர தரைக்கடைகளுக்கு குடைகள் வழங்கி வியாபாரிகளிடம் பாராட்டைப்பெற்ற திமுகவினர்.

மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாலையோர தரைக்கடைகளுக்கு குடைகள் வழங்கி வியாபாரிகளிடம் பாராட்டைப்பெற்ற திமுகவினர்.;

Update: 2025-11-28 18:03 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பூ, பழங்கள், காய்கறி உள்ளிட்ட பல்வேறு தரைக்கடைகள் வைத்துள்ள வியாபாரிகளுக்கு திமுக சார்பில் மெகா சைஸ் குடைகள் வழங்கப்பட்டன. திமுகவின் இருவண்ண நிறத்திலான குடைகளை முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கீதா ராஜாகாவேரி மணியன் வியாபாரிகளிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் தற்போது மழைக்காலம் என்பதால் இந்த குடைகள்‌ தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என துணை முதல்வருக்கும் குடைகள் வழங்கிய திமுகவினருக்கும் நன்றி தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு குடைகள் வழங்கப்பட்டன. இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Similar News