மணப்பாறை பால் கூட்டுறவு ஊழியர் சஸ்பெண்ட். பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை பால் கூட்டுறவு ஊழியர் சஸ்பெண்ட். பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சி மாவட்டம் மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு மணப்பாறையை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து கறவை மாடு வைத்துள்ளவர்கள் பாலை கரந்து விற்பனைக்காக மணப்பாறை கூட்டுறவு சொசைட்டிக்கு பணியாளர்கள் மூலம் அனுப்பி வைப்பர். அப்படி அனுப்பும் போது செவலூர் பகுதியில் இருந்து பால் சொசைட்டியில் பால் விநியோகம் செய்ய வந்த சொசைட்டி ஊழியர் பாலில் தண்ணீர் கலந்து பல நாட்களாக வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது .இந்த நிலையில் வழக்கம்போல் பாலில் தண்ணீரை கலக்கும் போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பால் சொசைட்டி ஊழியரை கையும் களவுமாக பிடித்து பால் சொசைட்டி செயலாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் ஊழியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலில் தண்ணீர் கலந்த விவகாரம் பல நாட்களாக நடந்து ஊழியர்களுக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கூட்டுறவு சொசைட்டிக்கு பால் வாங்க சென்ற பொதுமக்கள் அங்கு ஊழியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதைப்பார்த்து மக்களிடம் அச்சம் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து பால் கூட்டுறவு அங்காடியை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.