சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள் இரவு வரை கண்விழித்து தரிசனம்

சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள் இரவு வரை கண்விழித்து தரிசனம்;

Update: 2025-12-12 18:37 GMT
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள் இரவு வரை கண்விழித்து தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திரு சொர்ணபுரம் எனும் காத்திருப்பு கிராமத்தில் ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியில் சொர்ண கால பைரவர் அருள் பாலிக்கிறார். இங்கு உலக நலன் வேண்டி மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம் நடைபெற்றது. சொர்ண கால பைரவர் சன்னதியில் 9 யாக குண்டங்களுடன் சிறப்பு யாகம் செய்யப்பட்டு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கோயிலை வலம் வந்தது. பின்னர் சொர்ண கால பைரவருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ச்சியாக புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Similar News