ராமநாதபுரம் சிவன் கோயில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது

திருவாடானை சிவன் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்;

Update: 2025-12-18 11:28 GMT
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியமான வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் இன்று புதன் பிரதோஷத்தை முன்னிட்டு  நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ முன்னிட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

Similar News