நாகப்பட்டினத்தில் இந்திய சிறுபான்மையினர் உரிமை தினத்தை ஒட்டி ஏழை துப்புரவு தொழிலாளிகளுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் விநியோகம்!!

நாகப்பட்டினத்தில் இந்திய சிறுபான்மையினர் உரிமை தினத்தை ஒட்டி ஏழை துப்புரவு தொழிலாளிகளுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-12-18 13:39 GMT

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாஸனத்தை பிரகடனம் செய்தது. அதன் அடிப்படையிலேயே டிசம்பர் 18ஆம் தேதியன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி இன்று எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் தந்தை பேராயர் ஜெயசிங் வழிகாட்டல் படி , நாகை மாவட்ட ASMD நிறுவனத்தின் பேராயர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய துப்புரவு தொழிலாளர்களுக்கு அவரவர்கள் பணி செய்யும் இடத்துக்கே சென்று சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி சிறுபான்மை உரிமைகள் தினத்தை கொண்டாடினர்.

Similar News